எங்கள் நிறுவனம் மற்றும் சேவைகள் பற்றிய சிறு விளக்கம்

இது ஒரு இலாப நோக்கற்ற, தனித்துவமான மற்றும் வரையறுக்கப்படாத அமைப்பாகவும், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் மற்றும் பேராதனை பல்கலைக்கழகத்தின் வலுவான வழிகாட்டுதலுடனும் நிறுவப்பட்டது. மேலும் இவ்வமைப்பு மத்திய மாகாணத்தில் உள்ள தொடக்க மற்றும் சுதந்திர பணியாளர் (Freelancer) சமூகத்தால் இயக்கப்படுகிறது.

மத்திய மாகாணத்தில் ஒரு பாரிய தொழில்நுட்ப சமூகத்தை உருவாக்குவதற்காக அனைத்து தொழில்நுட்ப அடிப்படையிலான நிறுவனங்கள், தொடக்க நிறுவனங்கள் (Startups), தனிநபர்கள், ஆர்வலர்கள், பொழுதுபோக்கு ஆர்வலர்கள் (Hobbyist) ஆகியோரை ஒன்றிணைக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.
Central Startup Hub Logo

எங்களது நோக்கங்கள்

Central Startup Hub Logo
இலங்கையில் வெளிநாட்டு வருவாயை அதிகரிக்கவும் டிஜிட்டல் மயமாக்கலின் பிரிவினையை குறைக்கவும் திறமையான சுயபணியாளர்களை வலுப்படுத்துவதன் மூலம் தொடக்க நிறுவனங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதே எங்களது உலகளாவிய ஈடுபாட்டின் யுக்தியாகும்.

சுற்றுச்சூழலின் வளர்ச்சியை எளிதாக்குவதற்கும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், தொழில்முனைவோரை ஊக்குவிக்கவும், அடுத்த தலைமுறையை தொழில்முனைவோராக உருவாக்கவும் நாங்கள் ஆதாரமாக இருக்க விரும்புகிறோம்.
central startup hub : கண்டியில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்க மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து தொழில்நுட்ப நிறுவனங்களையும் இணைக்கிறது.